கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது!

கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியிலுள்ள வீட்டில் கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கல் துளைக்கும் இயந்திரத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது! (படங்கள்) | Trying To Dig Big Treasure

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முள்ளிப்பொத்தானை- சாலியபுர -பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 60 வயது உடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கந்தளாய் நீதிமன்றில் (13) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது! (படங்கள்) | Trying To Dig Big Treasure