மல்லாவியை உலுக்கிய கொலை விவகாரம் - நால்வருக்கு விளக்கமறியல்..!

மல்லாவியை உலுக்கிய கொலை விவகாரம் - நால்வருக்கு விளக்கமறியல்..!

முல்லைத்தீவு - மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (10) பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மல்லாவியை உலுக்கிய கொலை விவகாரம் - நால்வருக்கு விளக்கமறியல் | Mallavi Murder Case

இந்த நிலையில், நான்கு சந்தேகநபர்களை மல்லாவி காவல்துறையினர் நேற்று (11) கைது செய்திருந்தனர்.

அவர்களில் மூவர் நேற்றும், ஒருவர் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.