தமிழர் பகுதியிலும் பாதாள கும்பலா..!

தமிழர் பகுதியிலும் பாதாள கும்பலா..!

இலங்கையில் தமிழர்களுக்கான ஆயுத ரீதியிலான உரிமைப்போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவிற்கு வந்தது.

 யுத்தம் முடிந்து இன்றுவரை தமிழருக்கான தீர்வு என்று இதுவரை எதுவும் இல்லை. தமிழருக்காக போராடியவர்களையும் கண்டுகொள்ள எவருமில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டுகொள்ள எவருமில்லை.

தமிழர் பகுதியிலும் பாதாள கும்பலா --- | Underworld Gangs In Tamil Area Too

ஆனால், தற்போது ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கியுள்ளனர் மக்கள். இதனால் அவர்களுக்கான கேள்வி அதிகரிக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் களவுகளும் கொலைகளும், வாள்வெட்டு வன்முறைகளும் தமிழர் பகுதியில் நாளாந்தம் அரங்கேறி வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர் சமுக அக்கறையுள்ள சிலர்.

தென்னிலங்கையில் மோட்டார் சைக்கிள்களில் வரும் இனம்தெரியாதவர்கள் திடீர், திடீரென நடத்தும் துப்பாக்கிச் சூடுகளால் நிகழும் மரணம் போல தமிழர் தாயகப்பகுதியிலும் இப்போது துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

30 வருட போராட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளுமே மோதிக்கொண்டனர். அவர்களது துப்பாக்கிகளே களத்தில் கனன்று கொண்டிருந்தன.ஆனால் இன்று ..

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் அவர்களைத் தவிர எவரும் ஆயுதங்களை கையாள அனுமதி கிடையாது. அப்படி அவர்கள் கையாண்டால் அவர்களுக்கு உச்சபச்ச தண்டனையே வழங்கப்படும்.

ஆனால் இன்று தமிழர் பகுதியில் ஆரம்பித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் தற்போது துப்பாக்கி சத்தத்தில் வந்து நிற்கிறது.

தமிழர் பகுதியிலும் பாதாள கும்பலா --- | Underworld Gangs In Tamil Area Too

அண்மையில் கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதேபோன்று நேற்று(09) இரவு முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியில் நித்திரையில் இருந்த இளைஞன் மீது துப்பாக்கிசூடு மேற்கொள்ளப்பட்டு அந்த இளைஞன் கொல்லப்பட்டுள்ளான்.

அப்படியென்றால் ஒரு இனத்தின் விடுதலைக்காக எதிரியுடன் போராடிய எமது இனத்தின் எதிர்கால சந்ததி எங்கு செல்கிறது என்ற கேள்வி இயல்பானதாகவே எழுவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

கஞ்சா, ஹெரோயின்,  ஐஸ் என அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, அதனால் கையில் தூக்கப்படும் வாள்கள்போய் இன்று துப்பாக்கி ஏந்தும் நிலைக்கு சென்றுள்ளது எமது எதிர்கால சந்ததி.

இது அவர்களை எங்கு கொண்டு சென்று போய் விடப்போகிறது என பலரும் கேட்கின்றனர்.

தமிழர் பகுதியிலும் பாதாள கும்பலா --- | Underworld Gangs In Tamil Area Too

இல்லையென்றால் திட்டமிட்டு தென்னிலங்கையில் செயற்படும் பாதாள குழுக்கள் தமிழர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளனவா என அச்சத்துடன் நோக்கவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பலரக நவீன ஆயுதங்களைக் கையாண்டவர்கள் இன்று தாயகத்தில் மௌனமாக இருக்கும் நிலையில், முளைத்து மூன்று இலை கூட விடாத இளசுகள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது ஒருவகையில் சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் சமுக அக்கறையுள்ள ஒருவர்.

என்னதான் போங்கள் வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கான நலன்புரி நிலையம் திறந்து வைத்த அன்றே தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டில் தமிழர் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.

இது எமது இளம் சந்ததியை எங்கு கொண்டு சென்றுபோய் விடும்....