நடுவானில் நேருக்கு நேர் மோதி விமானங்கள் விபத்து! இருவர் உயிரிழப்பு...

நடுவானில் நேருக்கு நேர் மோதி விமானங்கள் விபத்து! இருவர் உயிரிழப்பு...

கொலம்பியாவில் விமானப்படை பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டி27 டுகானோ ரக விமானங்கள் இரண்டு இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் மேலும் ஒரு விமானி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் விமானப்படையை சேர்ந்த விமானிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.