பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண் ஒருவரின் புதிய உலக சாதனை!

பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண் ஒருவரின் புதிய உலக சாதனை!

ஸ்பெய்னை சேர்ந்த ஆண் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே படைத்துள்ளார்.

பெண்களின் 2.76 அங்குலம் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணிகளை அணிந்த நிலையில் 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண் ஒருவரின் புதிய உலக சாதனை! | New World Record Man In Women S High Heelsஇதேவேளை ஜேர்மனியை சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் 2019 ஆம் ஆண்டில் 14.02 விநாடிகளில் ஓடியமையே, ஹை ஹீல்ஸ் ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது.

இவர் பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தயாராகுவது சவாலாக இருந்தது என கூறியுள்ளார்.