வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி..!

வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி..!

இலங்கையின் மகாவம்சம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி யுனெஸ்கோ அமைப்பினால் வரலாற்று சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் 24ம் திகதி வெளியிடப்பட்டதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பேராதனைப்பல்கலைக்கழக நூலகசேகரிப்பில் காணப்படும் மகாவம்சம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி யுனெஸ்கோ அமைப்பால் மரபுரிமையாக பிரகடனபடுத்தபட்டுள்ளது.

வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி..! | Mahavamsam Text Declared Historical Book By Unesco

முன்னதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் வசமுள்ள ஒல்லாந்தர் காலத்துக்கான ஆவணங்கள் மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பான ஆவணங்கள் என்பன வரலாற்று சின்னமாக பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.