
காவல்துறையினரை தாக்க முயற்சி - 26 வயது இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு..!
ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய சந்தேக நபர் மீதே குறித்த துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.
மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, அவர் கூரிய ஆயுதத்தால் காவல்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
அதனைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.