
எமனாக மாறிய இளைஞன் - உதவிக்கு சென்ற பெண் பரிதாபமாக பலி...
தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமுர்த்தி வங்கியில் மானியத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற 68 வயதான வயோதிப பெண் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹந்தபாந்கொட சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நிலையில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிசிச்சை பலனின்றி அவர் உயரிழந்துள்ளார்.
19 வயதான இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. காயமடைந்த இளைஞனும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் அவர் தனது தந்தைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.