
சீனாவின் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 31 பேர் பலி...
சீனாவின் உணவகமொன்றில், திரவ பெட்ரோல் வாயு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்றைய(21) தினம் சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரில் பார்பிக்யூ உணவகம் ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.