மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணுக்கு கிடைத்த அசாத்திய திறமை...

மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணுக்கு கிடைத்த அசாத்திய திறமை...

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை சேர்ந்த பெண் ஒருவர் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய நிலையில் தனக்கு புதுவித சக்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 2009 ஆண்டு வீட்டின் சமையலறையில் பணியாற்றியவேளை இரண்டுமுறை மின்னல் தாக்குதலுக்கு ஆளானார் இவர்.எனினும் உயிர் ஆபத்து எதுவும் ஏற்படாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டார்.

மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணுக்கு கிடைத்த அசாத்திய திறமை | Amazing Talent Woman Survived A Lightning Strike

மின்னல் தாக்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 ஆண்டில் இவர் ஏபிசி செய்தி பிரிவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவருக்கு ஒரு அசாதாரண திறன் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய பெண்ணுக்கு கிடைத்த அசாத்திய திறமை | Amazing Talent Woman Survived A Lightning Strikeஇந்த திறன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணரும் திறன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புயல் மேகங்கள் சூழும் போது, க்ரோன் தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வை பெறுவதாக குறிப்பிடுகிறார். மேலும், அவ்வப்போது தலைசுற்றல், பய உணர்வு போன்ற பாதிப்புகளும் இவருக்கு ஏற்பட்டுள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.