யாழில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை நகை! பெண் ஒருவர் கைது..

யாழில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை நகை! பெண் ஒருவர் கைது..!

யாழில் வீடொன்றில் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நெல்லியடி பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம்(16.06.2023) நகைகள் களவாடப்பட்ட சம்பவம் குறித்து நகை உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த நெல்லியடி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கைது செய்துள்ளனர்.

யாழில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை நகை! பெண் ஒருவர் கைது | Jaffna Theft Incident Police Investigation

வேலை நிமிர்த்தமாக நேற்று காலை வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பியிருந்த போது வீட்டின் கதவு உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை நகை! பெண் ஒருவர் கைது | Jaffna Theft Incident Police Investigation

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலில் அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் கொள்ளையடிக்கப்பட்ட பெருந்தொகை நகை! பெண் ஒருவர் கைது | Jaffna Theft Incident Police Investigation

களவாடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி தனியார் நிறுவனமொன்றில் அடகு வைத்திருந்த நிலையில் நகையை  மீட்ட பொலிஸார், ஏனைய நகைகளை கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிலுள்ள பூச்சாடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று(18.06.2023) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீட்க்கப்பட்ட நகைகளையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.