இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண் - அதிர்ச்சியில் உறவுகள்…!

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண் - அதிர்ச்சியில் உறவுகள்…!

மரணச்சடங்கின் போது யாருமே எதிர்பாராதவகையில், பிரேத பெட்டியின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

ஈக்வடாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்ததாக கருதி பிரேதப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட 76 வயது மூதாட்டி ஒருவர் உயிருடன் எழுந்தது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாபாஹோயோ என்ற கடற்கரை நகரை சேர்ந்த மோன்டோயா என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து அவரது உடல் சுமார் 2 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அவர்களின் வழக்கப்படி பிரேத பெட்டிக்குள் மூதாட்டி வைக்கப்பட்டார்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண் - அதிர்ச்சியில் உறவுகள்! | Elderly Woman In Ecuador Wakes Up After Death

இறுதி சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் யாருமே எதிர்பாராதவகையில், பிரேத பெட்டியின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அச்சத்துடன் பெட்டியை திறந்து பார்த்ததில் மூதாட்டி உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அங்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. 

பிரேதபெட்டி வரை சென்று மூதாட்டி உயிர் பெற்றது தொடர்பாக சுகாதாரத்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.