தமிழர் பகுதியில் பரிதாமாக உயிரிழந்த சிறுவன்..!

தமிழர் பகுதியில் பரிதாமாக உயிரிழந்த சிறுவன்..!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில், வீட்டின் இரும்புப் படலை ஒன்று சிறுவன் மீது வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.

கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த மூன்று வயதான ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.