நாட்டில் சில பகுதிகளுக்கு 20 மணித்தியால நீர் வெட்டு..!

நாட்டில் சில பகுதிகளுக்கு 20 மணித்தியால நீர் வெட்டு..!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (13) 20 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பெலன்வத்தை அலுவலகத்திற்குச் சொந்தமான நீரேற்று நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே நாளை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (13) முற்பகல் 10 மணி முதல் 20 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி,  கோரகபிட்டிய, சித்தாமுல்ல, ஆரவல, ரத்மல்தெனிய, மஹரகம-பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மடவளை வீதி, பொகுந்தர வீதி மற்றும் அது தொடர்பான அனைத்து பக்க வீதிகளும் உட்பட்ட பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடைப்படும் என்பது குறிப்பிடதக்கது.