கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் கைது!
ஹம்பேகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உலர் கஞ்சா வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 08 கிலோ 05 கிராம் உலர் கஞ்சாவை இராணுவ சிப்பாய் வைத்திருந்ததாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் அம்பலாந்தோட்டை, மயூரபுர பொறியியல் சேவை படைப்பிரிவை சேர்ந்த 24 வயதுடைய இராணுவ சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
உலர் கஞ்சாவை கடத்துவதற்காக வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.