கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...

கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர், நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index இல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Gmoa Warns Increasing Mosquito Populations Colombo

பொதுவாக Breteau Index மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் ஆனால் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுநோய் நிலைமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.