ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள்..!

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள்..!

எம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது அடைய வேண்டும், கிடைக்க வேண்டும் என்று மனதில் ஆழமான ஆசை இருக்கும். 

அது கிடைக்குமா, இல்லையா என்பதனையும் தாண்டி,  அது குறித்த ஆசை மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

​ ஒவ்வொரு ராசிக்கும் மனதில் ஒளிந்திருக்கும் ஆசை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

மீன ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நீர் அடையாளமான மீன ராசியினர் பொதுவாக படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் மிக்கவர்கள்.

இவர்களின் கற்பனை போலவே இவர்களின் ஆசையும் இருக்கும். அதாவது யதார்த்தங்களிலிருந்து தப்பித்து, தன் கற்பனையில் இருக்கும் உலகில் வாழ வேண்டும் என நினைப்பார்கள். 

தன் கனவுகளை நிறைவேற்ற வாழ விரும்புவார்கள். தன் கற்பனை அல்லது ஆசை நிறைவேற்ற முடியுமோ இல்லையோ ஆனால் அதனை யதார்த்தமாக்க விரும்புவார்கள். 

கும்ப ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

கும்ப ராசியினர் எப்போதும் சுதந்திரமாகவும் மற்றும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். 

தான் நினைத்து பார்க்காத அளவிற்கு முன்னேற்றத்தை, அதிகாரத்தை அடைய வேண்டும் என நினைப்பார்கள்.

எந்த சூழலிலும் தன் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என ஆசை மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.  

மகர ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

மகர ராசியினர் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.

இவர்கள் தன் உழைப்பை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்றும், வெற்றியின் ஏணியில் ஏறி தான் கொண்டாட வேண்டும், மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற ஆசை மனதில் நிறைந்திருக்கும். 

தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகத்தால் போற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

தனுசு ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நெருப்பு ராசியான தனுசு ராசியை சேர்ந்தவர்கள் சுதந்திரத்தையும், சாகசத்தையும் விரும்பக்கூடியவர்கள்.

இவர்கள் மனதில் ஒளிந்திருக்கும் ஆசையும் இது தொடர்பாகவே இருக்கும். 

அதாவது புதிய விஷயங்களை ஆராய்வதும், அனுபவிக்கவும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் இவர்களின் ஆசையாக இருக்கும். 

விருச்சிக ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நீர் ராசியை சேர்ந்தவர்கள் விருச்சிக ராசியினர் ஆழமாக யோசிப்பதும், பெரியவர்களை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

அதே சமயம் இவர்களிடம் மறைந்துள்ள ஆசை என்னவாக இருக்குமெனில் தன் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடம் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தன் அதிகாரத்தையும், அவர்களை தன் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். 

மேஷம் ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நெருப்பு ராசியான மேஷ ராசியினர் எப்போதும் நெருப்பைப் போல மனதில் தங்கள் ஆசைகளை நிறைவேற வேண்டும் என கொதித்துக் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் பெரிய விஷயங்களை சாதிக்கவும். அதற்காக தடையாக இருக்கும் விஷயத்தை சாதகமாக்கவும் நினைப்பார்கள். 

தான் மற்றவர்கள் முன் பிரகாசிக்கவும், முன்னணியில் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த ஆசை எப்போதும் இருக்கும். 

ரிஷப ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நிலம் எனும் ஸ்திர ராசியை சேர்ந்தவர்கள் ரிஷப ராசியினர்.

பூமியின் அடையாளமான இவர்கள் மனதில் மறைந்திருக்கும் ஆசை என்னவெனில் தனக்கென நிலம், வீடு, மனை இருக்க வேண்டும். 

தான் ஆசையாக கட்டிய வீட்டில் குடியேற வேண்டும் என்பதும், செல்வத்தையும், உடைமைகளையும் குவிக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசைகளாக இருக்கும்.

மிதுன ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

காற்று ராசியை சேர்ந்தவர்கள் மிதுன ராசியினர்.

இவர்கள் மனதில் எப்போதும் மறைந்திருக்கும் அல்லது ஓடிக்கொண்டிருக்கும் விஷயமாக இருப்பது இவர்கள் எப்போதும் சலிப்படையாத வகையில் வாழ்க்கையில் செல்வங்களும், புதிய விஷயங்களை செய்யும் ஈடுபாடும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 

இவர்களின் ராசி அடையாளத்தைப் போல இவர்களின் ஆசையும் இரண்டாக இருக்கும். 

கடக ராசியின் ஆசைகள்

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நீர் ராசியை சேர்த்தவர்கள் கடக ராசியினர்.

இவர்கள் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிகளின் அடையாளம். 

நெருங்கிய உறவுகளையும், உணர்வுகளையும் மதிக்கும் இவர்கள், எப்போதும் பாதுகாப்பான, வசதியான வீட்டுச் சூழல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசையாக இருக்கும்.

நிதி, காதல், ஆன்மிகம், குடும்ப வாழ்க்கை என அனைத்து அம்சங்களிலும் இவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் அதற்கான சூழல் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

சிம்ம ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

நெருப்பு ராசியை சேர்ந்தவர்கள் சிம்மம். 

நவகிரக தலைவன் சூரியன் ஆளக்கூடியதால் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், தங்களைச் சுற்றியிருப்பவர்களால் நேசிக்கப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

மேலும் மற்றவர்களால் மதிக்கப்படவும், பாராட்டவும் வேண்டும் என விரும்புவார்கள்.

கன்னி ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

கன்னி ராசியை சேர்ந்தவர்கள் தனக்கென ஒரு அடையாளம் தேவை என ஆசைப்படுவார்கள். 

இவர்களின் குணமான பரிபூரண வாதிகளாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் ரகசியமாக ஒருவரை காதலிக்க வேண்டும் என்றும், பதிலுக்கு அவர்களால் நேசிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புவார்கள்

துலாம் ராசியின் ஆசைகள் 

ஒவ்வொரு ராசியினரின் மறைமுக ஆசைகள் | Hidden Desires Of Each Zodiac Sign

துலாம் ராசியினர் காற்று ராசியை சேர்ந்தவர்கள். 

அதே சமயம் இவர்கள் தராசு ராசி அடையாளமாக கொண்டவர்கள். 

காற்று மாதிரி ஆடாமல், தராசு போன்று அனைத்திலும் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைப் பேண நினைப்பார்கள்.

 அன்பான உறவுகள் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசை மற்றும் ஏக்கமாகக் கூட இருக்கும்.