யூடியூப் போல மாறும் வட்ஸ்அப் - புதிய அப்டேட்...

யூடியூப் போல மாறும் வட்ஸ்அப் - புதிய அப்டேட்...

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளதோடு,  பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதுவும் சமீப நாட்களில் வாரம் ஒரு அப்டேட்களை வெளியிட்டு போட்டியான நிறுவனங்களுக்கு சவால் அளித்து வருகிறது.

அந்தவகையில், யூடியூப் போல் வட்ஸ்அப் சனல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

யூடியூப் போல மாறும் வட்ஸ்அப் - புதிய அப்டேட் | Whatsapp Launches Channels Feature Broadcast

விருப்பமான சனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.

நேரடியாக நிறுவனத்திற்கு மெசேஜ்களை அனுப்ப முடியும்.

இருப்பினும் இந்த வசதி வட்ஸ்அப் சனல் அம்சம் தற்போது கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா  உறுதியளித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் கொலம்பியாவில் உள்ள அனைத்து தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வட்ஸ்அப் சனல்களை உருவாக்க முடியும்.

யூடியூப் போல மாறும் வட்ஸ்அப் - புதிய அப்டேட் | Whatsapp Launches Channels Feature Broadcast

வட்ஸ்அப்பில் உள்ள சனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவிகளாகும்.

அங்கு அட்மின்கள் படங்கள், காணொளிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை நடத்தலாம்.

பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சனல்களை லிங்க் அல்லது அந்த குறிப்பிட்ட சனலை வட்ஸ்அப்பில் தேடி சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.

இதற்காக வட்ஸ்அப்பில் “அப்டேட்ஸ்” என்ற புதிய மெனு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வட்ஸ்அப் குரூப் வசதி போல் சனல் அட்மின் அனுமதி அளித்த பின் தான் சேனலில் இணைய முடியும்.

தனியுரிமை பாதுகாக்கும் வகையில் பயனர் தொலைபேசி எண்கள் மற்றும் சுயவிவர புகைப்படமும் யாருக்கும் காண்பிக்கப்படாது.

வட்ஸ்அப் சனலில் பதிவிடப்படும் தகவல் (படங்கள், காணொளி) உட்பட அனைத்தும் 30 நாட்கள் மட்டுமே காண்பிக்கப்படும். தற்போது இந்த அம்சம் 2 நாடுகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.