255 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

255 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

255 சிபெட்கோ விற்பனை முகவர்கள் கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறைந்தபட்ச கையிருப்பினை பராமரிக்கத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தங்களில் நிபந்தனைகளை மீறிய விற்பனை முகவர்களுக்கு எதிராக மதிப்பாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.