இலஞ்சம் பெறமுயன்ற பிரதேசசபை செயலாளர் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு...
இலஞ்சம் பெறமுயன்றவேளை கைது செய்யப்பட்ட சூரியவெவ பிரதேச சபையின் செயலாளரை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூாியவெவவில் வாராந்த சந்தையை நடத்திச் சென்ற ஒருவருக்கு செலுத்தப்படவிருந்த 24 இலட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்குவதற்கு குறித்த செயலாளா் 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாக கோாியுள்ளாா்.
இதனையடுத்து குறித்த ஒப்பந்ததாரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து, குறித்த இலஞ்சத்தை பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.