
உக்ரைனை அச்சுறுத்தும் பாரிய பேரழிவு - நகரமே காணாமல் போகும் என எச்சரிக்கை..!
ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உக்ரைனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், இன்று காலை ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
அணை உடைக்கப்பட்டதால், அதிலிருந்து பெருமளவில் வெளியேறி வரும் வெள்ளம் அருகிலிருக்கும் பகுதிகளைச் சூழ்ந்து வருவது, ஏற்கனவே நிலவிவரும் போர்ப் பதற்றங்களை அதிகரித்திருக்கிறது.
இது தொடர்பான காாணொளியினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இந்த அணை 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகின்றது.
இதில் தற்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அணையின் சரிவு உள்ளூர் பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் உக்ரைனின் போர் முயற்சியை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த அணை தகர்க்கப்பட்டமைக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் ரஷ்ய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஏவுகணை தாக்குதலினால் இந்த அணை அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.