13 வயது சிறுவன் மீது 10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்!
கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குறித்த சிறுவனை இன்றைய தினமும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த சிறுவன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி சிறுவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.