சமூர்த்தி பயனாளர்களுக்கு மீண்டும் கடன் வழங்கும் திட்டம்

சமூர்த்தி பயனாளர்களுக்கு மீண்டும் கடன் வழங்கும் திட்டம்

சமூர்த்தி பயனாளர்களுக்கு வர்த்தகம் மற்றும் சுய வேலைவாய்ப்பினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கடன் வழங்கும்  நடவடிக்கை  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி திணைக்களத்தினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடன் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டியில்லா 10 ஆயிரம் ரூபா பணத் தொகையினை 18 மாதங்களில் மீள செலுத்தி நிறைவு செய்யும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 4 வீத வட்டி அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொள்வதற்கான சலுகையும் சமூர்த்தி பயனாளர்களுக்கு காணப்படுகின்றமை சுட்டிக்காடத்தக்கது.