எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பிற்கு படையெடுக்கவுள்ள குழு - முற்றுகையிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு..!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் கொழும்பிற்கு அழைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சென்று போராட்டத்தில் ஈடுபடுவர் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்கள் கடக்கின்ற போதும் இன்னும் தேர்தல் நடத்தப்படாதிருப்பதாகவும், இதனால் தேர்தலை தாமதிக்காது நடத்துமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.