மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விலை விபரம்!

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விலை விபரம்!

உலக சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,450 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,750 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.