யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம்!

யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம்!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று நாளையுடன் 42ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் இன்றைய தினம் வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வுபூர்வமாக நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் பொது நூலக எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கையில் 1981 ஆம் ஆண்டு கடும்போக்குவாத அரசின் கைக்கூலிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட யாழ் நூலக எரிப்பு இடம் பெற்று நாளையுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம் | Jaffna Public Library Burning

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலமான 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி யாழ் நூலக எரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இன மற்றும் மத கலவரங்களை தூண்டி விடுவதன் மூலம் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள சில அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதனால், இலங்கையின் நிலை மேலும் மோசமடையும் எனவும் அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும்

அதேவேளை, பொது மக்கள் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கத்தோலிக்க திருச் சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மதங்களையும் அதன் படிப்பினைகளையும் அவமதிக்கும் வகையில் பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.  

அதனை அண்மை நாட்களில் அதிகளவில் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மத படிப்பினைகளையும் அவமதிக்கும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் கடமை.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 

இதன் பிண்ணனியில் இருந்து செயல்படுபவர்களை அடையாளம் காண வேண்டியது மற்றும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரின் கடமை. 

யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம் | Jaffna Public Library Burning

அண்மையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய கத்தோலிக்க பிண்ணனியை உடையவர் எனவும் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

கத்தோலிக்க பாடசாலையொன்றின் அரங்கத்தில் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் நிராகரிக்கிறோம். குறித்த நிகழ்வு இடம்பெற்றது கத்தோலிக்க பாடசாலையில் அல்ல.

இலங்கையில் பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் எவரேனும் செயற்படும் பட்சத்தில், பாரபட்சமின்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், செயற்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம் | Jaffna Public Library Burning

இலங்கையில், அண்மைக் காலமாக சில மதக் குழுக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மார்க்க அறிஞர்களைக் கண்டிக்கும் நிகழ்ச்சி நிரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில், சமூக ஊடகங்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் நாள் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார். 

இவ்வாறு நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை விசாரணை செய்வதற்காக தனி காவல்துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் பொது நூலக எரிப்பு - இன்று உணர்வுபூர்வ நினைவு தினம் | Jaffna Public Library Burning

மேலும் இலங்கையில், மொழிச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பன அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது அரசியலமைப்பில் தெளிவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயல்படுவது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.