லண்டனில் திரையிடப்படும் ஈழத்தமிழரின் "தூவானம்" திரைப்படம்!

லண்டனில் திரையிடப்படும் ஈழத்தமிழரின் "தூவானம்" திரைப்படம்!

தாயகக் கலைஞர்களின் முயற்சிகளுக்கு கிளி மக்கள் அமைப்பு (கிளி பீப்பிள்) தமது ஆதரவினையும் ஊக்கப்படுத்தல்களையும் தொடர்ந்து வழங்கிவரும் நிலையில் "தூவானம்" திரைப்படம் லண்டன் நகரில் சிறப்புக்காட்சியாக (London Premier Show) காண்பிக்கப்பட உள்ளது.

தூவானம் திரைப்படமானது கிளிநொச்சி மண்ணின் கல்வியலாளரும் யாழ் பல்கலைக்கழக நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளருமான திரு ரதிதரனின் இயக்கத்தில், யாழ் வைத்தியசாலை வைத்திய நிபுணர் சிவன்சுதன் தயாரிப்பில் முற்று முழுதாக ஈழத்துக் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டது.லண்டனில் திரையிடப்படும் ஈழத்தமிழரின் "தூவானம்" திரைப்படம்! | Thoovanam Movie Of Eelam To Be Screened In London

தூவானம் முழுநீள திரைப்படமானது ஈழத்தமிழரின் கால ஓட்டத்தின் கதையை கருவாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக சர்வதேச வைத்தியர் சங்க பிரித்தானிய கிளை இணைந்து இந்த நிகழ்வை எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி நடத்துகின்றது.

மாலை நான்கு மணியளவில் Alperton Community School, Ealing Road, HA0 4PW என்னும் முகவரியில் இந்த திரைப்படம் திரையிடப்படுகின்றது.

பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ் ரவிராஜ் அவர்கள் கலந்து கொள்வதுடன், திரைப்படத்தின் தயாரிப்பாளர் வைத்திய நிபுணர் சிவன்சுதன் ஆகியோர் தாயகத்திலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.