
சட்ட விரோத சொத்துக்களை விசாரிக்கும் புதிய விசாரணைப்பிரிவு ஆரம்பம்!
சட்ட விரோத சொத்துக்கள் குறித்து விசாரிப்பதற்கான புதிய விசாரணைப்பிரிவு ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரைக்கொண்டதாக இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் சட்டவிரோத கையடக்க தொலைபேசி பயன்பாட்டினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை இந்த புதிய விசாரணைப்பிரிவு முன்னெடுக்க உள்ளது.
அத்துடன், திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலமான பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பிடுதல் தொடர்பான விசாரணைகள், வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்தல், முடக்குதல் மற்றும் அரசுடமையாக்குதல் போன்ற விடயங்களையும் இந்த புதிய பிரிவு கையாளவுள்ளது.