ஏலத்தில் விடப்படும் ஹிட்லருக்குச் சொந்தமான பென்சில் - மதிப்பிடப்பட்டுள்ள பெறுமதி!

ஏலத்தில் விடப்படும் ஹிட்லருக்குச் சொந்தமான பென்சில் - மதிப்பிடப்பட்டுள்ள பெறுமதி!

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.

குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம் விடப்படவுள்ளது.

hitler pencil

1941 ஆம் ஆண்டு இந்தப் பென்சிலை ஹிட்லருக்கு 52 ஆவது பிறந்த நாள் பரிசாக அவரின் நீண்ட நாள் காதலி எவா பிரான் (Eva Braun) கொடுத்தார் எனக் கூறப்படுகிறது.

அதில் 'எவா' என்று ஜெர்மானிய மொழியிலும் "AH" என்ற எழுத்துகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பென்சிலை 2002 ஆம் ஆண்டு ஒருவர் ஏலத்தில் வாங்கினார், இது மீண்டும் ஜூன் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள Bloomfield ஏலத்தில் மீண்டும் விற்கப்படவுள்ளது.

இதேவேளை, அதனுடன் கையெழுத்திடப்பட்ட ஹிட்லரின் படம், விக்டோரியா அரசியார் வழங்கிய கையால் எழுதப்பட்ட மன்னிப்பு ஆவணம் ஆகியவையும் ஏலம் விடப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.