16 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற காதலன்!

16 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற காதலன்!

இந்திய தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வீதியில் 16 வயது சிறுமி, 20 இளைஞர் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாஹில் என்ற குறித்த இளைஞர், தன் காதலியான அந்த சிறுமியை பொதுவெளியில் 22 முறை கத்தியால் குத்திய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஆத்திரம் அடங்காத இளைஞர், கல்லை தூக்கி போட்டு சிறுமியை கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அவரை தடுக்க முற்படவில்லை.

குறித்த சிறுமி பிறந்தநாள் விழா ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குளிரூட்டி பழுது பார்க்கும் சாஹில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை நடத்திய விசாரணையின்போது, "சிறுமி தன்னை புறக்கணித்ததால் கொன்றதாகவும், அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை." என்று கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைக்கு பின் காவல்துறை தரப்பில், சாஹிலும் சிறுமியும் மூன்று ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.