யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..!

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த வாகனம் தட்டியுள்ளது.

இதனால், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதன்போது, பின்னால் வேகமாக வந்த பாரவூர்தியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..! (படங்கள்) | Road Accident In Jaffna Accident News

 

மீசாலையைச் சேர்ந்த 29 வயதான இராசரத்தினம் அபிதாஸ் என்ற இளைஞனே  சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 நேர்காணல் ஒன்றிற்காக சென்றபோதே குறித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..! (படங்கள்) | Road Accident In Jaffna Accident News