பட்டம் விடுவதில் வெடித்தது மோதல் -வெட்டப்பட்டது மணிக்கட்டு.!

பட்டம் விடுவதில் வெடித்தது மோதல் -வெட்டப்பட்டது மணிக்கட்டு.!

மாத்தறை வெஹரகம்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பட்டம் பறக்க விடுவதில் ஏற்பட்ட மோதலின் போது மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மாத்தறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறநித்த நபரை தாக்கி, இடது கையை மணிக்கட்டில் பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.

ஐஸ் கட்டிக்குள் வைக்கப்பட்ட கையின் துண்டிக்கப்பட்ட பகுதியை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர், உடனடியாக அதனுடன் காயமடைந்தவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மாத்தறை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் ஹெட்டியாராச்சி மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி ருக்மன் கோட்டகே ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.