கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் இலங்கையர் மரணம்.!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மெல்பேர்னிலிருந்து நேற்று (27.05.2023) இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் விமானத்தில் உயிரிழந்ததையடுத்து விமானத்தை மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதற்கு பதிலாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.