எதிர் தாக்குதல் விரைவில்: உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

எதிர் தாக்குதல் விரைவில்: உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்ய மோதலின் தீவிரம் தொடர்பில் உலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இதனை தெரிவித்துள்ளார்.

 

எனினும் அதற்கான சரியான திகதியை குறிப்பிடவில்லை என குறித்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து உக்ரைன் பிரதேசத்தை மீட்பதற்கான தாக்குதல் "நாளை, நாளை மறுநாள் அல்லது ஒரு வாரத்தில் தொடங்கும்." என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கீவ் மற்றும் டினிப்ரோ நகரம் மற்றும் உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் மீது ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் 10 ஏவுகணைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

இரவு நேர சோதனையின் போது மொத்தம் 17 ஏவுகணைகள் மற்றும் 31 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று வர்ணித்தமை குறிப்பிடத்தக்கது. .