17 நாடுகள் சேர்ந்து அடித்து கொன்றார்கள்: கொழும்பு மக்களின் அதிரடி..!

17 நாடுகள் சேர்ந்து அடித்து கொன்றார்கள்: கொழும்பு மக்களின் அதிரடி..!

தமிழ் மக்களின் வாக்கு சரத் பொன்சேகாவிற்கு எப்போதும் கிடைக்காது என கொழும்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் இவ்வாறு தமது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தெரிவிக்கையில், தமிழர்களை கொன்றதே மிகப்பெரிய பாவம். யுத்தத்தை நிறுத்தியது யார்? இவர்களா? 17 நாடுகள் சேர்ந்து அடித்து கொன்றார்கள்.

உக்ரைன் அப்போது வழங்கிய ஆதரவிற்கு தான் இப்போது தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தவர்களுக்கு இனி அரசாங்கத்தை ஆளுகின்ற பொறுப்பு கிடைக்கப் போவதில்லை.

சரத் பொன்சேகாவின் கருத்தானது கண்டிக்கத்தக்க விடயம் என்பதை விட நகைச்சுவையான விடயம். தமிழ் மக்களின் வாக்கு சரத் பொன்சேகாவிற்கு எப்போதும் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளனர்.