ரஷ்ய உளவுக் கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்!

ரஷ்ய உளவுக் கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்!

கருங்கடலில் பயணம் செய்த ரஷ்ய போர்க்கப்பலை மூன்று உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யா தரப்புகளில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் குறித்த கப்பல் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கடற்படையின் இவான் குர்ஸ் உளவுக் கப்பலானது, பாஸ்பரஸ் கடல்பகுதிக்கு வடக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாத மூன்று ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்த தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிட உக்ரைன் மருத்துள்ளதாக கூறப்படுகிறது.