அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு : வெளியானது புதிய அறிவிப்பு…!

அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு : வெளியானது புதிய அறிவிப்பு…!

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (26) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி மற்றும் விநியோக திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​கார்கள் மற்றும் வாகனங்களுக்கு 30 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 08 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 7 லீற்றரும், பேருந்திற்கு 60 லீற்றரும் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.