"கோலி" எனக் கூச்சலிட்டு நவீனை சீண்டிய ரசிகர்கள் - நவீன் உல் ஹக் தெரிவித்த விடயம்!

"கோலி" எனக் கூச்சலிட்டு நவீனை சீண்டிய ரசிகர்கள் - நவீன் உல் ஹக் தெரிவித்த விடயம்!

மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தினம் மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையில் இடம்பெற்ற தகுதிகான் ஆட்டத்தில் நவீன் உல் ஹக் விளையாடிய போது ரசிகர்கள் கோலி கோலி என கூச்சலிட்டனர்.

இது தொடர்பில், செய்தியாளர் சந்திப்பில் நவீன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதி இருந்த ஆட்டத்தின் போது, பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை சொல்லி கூச்சலிட்டுள்ளனர்.

இது தொடர்பில் நவீன் தெரிவித்தது,

"உண்மையில் நான் அதை ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் அப்படிக் கத்துவது என் அணிக்காக நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது." இவ்வாறு நவீன் உல் ஹக் கூறியுள்ளார்.