பேருந்து சேவைகளை குறைக்கத்திட்டம்! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பேருந்து சேவைகளை குறைக்கத்திட்டம்! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

சில வீதிகளில் பேருந்து சேவைகளை 50வீதத்தால் குறைக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

கொரோனவைரஸின் இரண்டாம் அலை ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக பயணிகள் பேருந்துகளில் செல்வற்கு தயக்கம் காட்டுவதே இந்த நிதி நெருக்கடிக்கான காரணமாகும் என்று கெமுன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தாம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளபோதும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியுடன் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதால், பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்க அல்லது எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு தாம் ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குத்தகை கொடுப்பனவு காலத்தை மேலும் நீடிக்கவேண்டும் என்றும் காப்புறுதி கொடுப்பனவுகளை நீடிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கம் உரிய பதில்களை வழங்கவில்லை. எனவே எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து சில வீதிகளில் பேருந்து சேவைகளை குறைப்பதை விட வேறு வழியில்லை என்று கெமுன விஜேரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக தாம் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லை. எனினும் தனியார் பேருந்து சேவை தொடர்பில் அரசாங்கம் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்று கெமுன வலியுறுத்தியுள்ளார்.