அத்தியாவசிய பொருட்களின் விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியானது புதிய விலைப் பட்டியல்!

அத்தியாவசிய பொருட்களின் விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியானது புதிய விலைப் பட்டியல்!

இலங்கையில் 6 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று(24)முதல் நடைமுறையாகும் வகையில், சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதன் புதிய விலைகளின் விபரமும் குறைக்கப்பட்ட விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

400g பால்மாவின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1030 ரூபா.

1 கிலோகிராம் காய்ந்த மிளகாய் 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1350 ரூபா.

சிவப்பு பருப்பின் 1 கிலோகிராமின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 325 ரூபா.

1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 129 ரூபா.

1 கிலோகிராம் வெள்ளை சீனி 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 239ரூபா.

சோயா மீட் 1 கிலோ 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை 660 ரூபா என  சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.