வீதிப் பாதுகாப்பு வாரத்தையொட்டி வவுனியாவில் மாணவர்கள் பேரணி..!

வீதிப் பாதுகாப்பு வாரத்தையொட்டி வவுனியாவில் மாணவர்கள் பேரணி…!

வீதிப் பாதுகாப்பு வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ. லோகேஸ்வரன் ஆலோசனையில் பாடசாலை வீதிப் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி, மணிக்கூட்டுச் சந்தி வரை சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்திருந்தது.

இவ் ஊர்வலத்தில் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், பாடசாலை அதிபர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 800 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர்.