திரிபோஷாவுக்கு வரிச் சலுகை...

திரிபோஷாவுக்கு வரிச் சலுகை...

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 25 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வரிச் சலுகை மே மாதம் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை மே 18 ஆம் திகதி முதல் நீக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.