அதிகரிக்கும் வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை..!

அதிகரிக்கும் வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை..!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வானிலை தொடர்பிலான எச்சரிக்கையானது (18) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேலும் இவ் அறிவித்தல் நாளை (19) வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது அதிகமாக காணப்படும் எனவும் இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.