இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டது

இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டது

இந்த வருடம் இடம்பெறயிருந்த  இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட்  போட்டியை ஒரு வருடத்தினால் பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இவ்வாறு பிற்போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியை  அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.