சென்னை வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறிய மும்பை அணி..!

சென்னை வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறிய மும்பை அணி..!

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 49வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. 

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20ஓவர் நிறைவில் 138 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்தது.

மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64(51) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் இலங்கை வீரரான பதிரன அதிகபட்சமாக 3(4-15) விக்கட்டுகளை கைப்பற்றினார்.