காசநோய் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

காசநோய் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

2022ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்ட 301 பேரில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அறியாமையாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும், இந்த ஆண்டு முதல் சில மாதங்களிலும் இதே நிலையே காணப்படுகின்றது.

சமூகத்தில் 4,000 முதல் 5,000 வரை கண்டறியப்படாத காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோய் பற்றீரியா மூலம் பரவுகிறது.

நோய்வாய்ப்பட்ட ஒருவர் இருமும் போது, பேசும்போது, ​​தும்மும்போது, ​​சிரிக்கும்போது, ​​அது காற்றின் மூலம் ஆரோக்கியமான ஒருவருக்குப் பரவுகிறது.