
இளைஞன் ஒருவரை தாக்கிய குண்டர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்...!
நோர்வூட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை பொயிஸ்ட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக தோட்ட தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம்(03) முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை(நேற்று) இரவு 9.30மணியளவில் புளியாவத்தை வீரட் பகுதியில் இருந்து வான் ஒன்றில் வந்த பத்துக்கும் மேற்பட்ட குண்டர்களினால் பொயிஸ்டன் தோட்ட இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாக்குதல் நடாத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வழியுருத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவளே தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததோடு குறித்த குண்டர்களை நோர்வூட் காவல்துறையினர் கைது செய்யும் வரை தாம் தொழிலுக்கு போவதில்லை எனவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்ந சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடாத்திய குழுவினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வூட் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.