கொரோனா வைரஸ்: திருப்பதியில் முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்: திருப்பதியில் முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி  ஏழுமலையான் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர்  சிகிச்சைப் பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

மேலும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளும் காணப்பட்டதாக  இவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீனிவாச மூர்த்தி தீக்‌ஷிதுலு, (வயது 75) பெட்டின்டி மிராசி குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

திருப்பதி  ஏழுமலையான் ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக இவர்களது குடும்பம் சேவையாற்றி வருகின்றது.

மேலும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் கட்டாயப்படுத்தி, ஓய்வு பெறச் செய்த 4 அர்ச்சகர்களில் இவரும் ஒருவர்.

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில், சேவையில் ஈடுபட்டு வந்த  160 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.