ஐஎஸ் தலைவரை ஒரே இரவில் முடித்த துருக்கி! உறுதிப்படுத்திய துருக்கி அதிபர்...

ஐஎஸ் தலைவரை ஒரே இரவில் முடித்த துருக்கி! உறுதிப்படுத்திய துருக்கி அதிபர்...

இஸ்லாமிய கலீபா இராச்சியம் என தம்மை விழித்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-குரேஷி துருக்கி உளவுத்துறையால் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஆதரவு போராட்ட குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரிய நகரமான ஜென்தாரசில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது அபு பக்கர் அல்-குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனியன்று இரவு ஜென்தாராஸ் நகரில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்ட பொது அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.