அமெரிக்காவில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி...!

அமெரிக்காவில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி...!

அமெரிக்காவின் டெக்சாஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு வயது சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த அனைவருக்கும் தலையில் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய 38 வயதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன் அவரின் மீது ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் அருகிலுள்ள காட்டில் பதுங்கியிருப்பதாகவும், அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதுடன் ஆளில்லா விமானத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.